மனிதன்தன் வாழ்க்கையில் நல்லமுறையில் முன்னேறவேண்டும் என்ற உத்தேசத்துடனேயே மஹரிஷிகள்பல சாஸ்திரங்களை எழுதியுள்ளனர். எந்தக்கர்மத்தை எப்படிச்செய்தால் நற்பலன் கிடைக்கும், எதைச்செய்தால் கெட்டபலனை அனுபவிக்கவேண்டிவரும் என்பவை பற்றி அவற்றில் விவரமாகக்கூறியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் படிக்கநேரம் கிடைக்கவில்லையென்றால் நம்வீட்டிலிருக்கும் பெரியோர்களிடமிருந்தாவது கற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் முற்பிறவியில் செய்த புண்யபாபங்களின் பலனாக அவன்வருங்காலத்தில் ஸுகதுக்கங்களை அனுபவிப்பான். மொத்தத்தில், ஒருவன் செய்யும்பாப புண்யகர்மங்களுக்கேற்றவாறு அவற்றின் பலனை அவனேகாலக்ரமத்தில் அனுபவிப்பான் என்பது நிச்சயம். முன்செய்த கர்மங்களை இப்பொழுது ஒன்றும்செய்யமுடியாது, ஆகையால் இப்பொழுது செய்யும் கர்மங்களை நன்றாக ஆலோசித்து பெரியவர்களின் உபதேசத்துடன் ஒருவன் செய்துவந்தால் வருங்காலத்தில் அவனுக்கு ஸுகமும்ச்ரேயஸும் உண்டாகும். புண்யகர்மாவானாலும்சரி, பாபகர்மாவானாலும்சரி, ஒருவன் செய்தகர்மத்தின்பலனை இன்னொருவன் அனுபவிக்கமுடியாது. மனிதன் தனியாகத்தான் பிறக்கிறான். தனியாகத்தான் இறந்துமறுபடியும் அடுத்தஜன்மத்தை அடைகிறான். ஸுகதுக்கங்களையும் தனியாகத்தான் அனுபவிக்கிறான். இதைத்தான் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் ஆகையால் ஸுகத்திற்கானகாரணத்தை முன்னோர்களிடமிருந்து தெரிந்துகொண்டு ஸத்கர்மாக்களைச்ரத்தையுடன் செய்துவரஎல்லோரையும் ஆசிர்வதிக்கிறோம்..
 Individual – one single magazine : INR 20 / -
	            One year subscription : INR 200 / -
	            
	            Two years subscription : INR 400 / -
	            Five years subscription : INR 1000 / -
	            Foreign – one year subscription : INR 2500 / -
Amman Dharsanam Publications Pvt Ltd.,
	            Old #11, New #21, Venkat Narayana Road,
	            T. Nagar, Chennai - 600 017.
	            Tamil Nadu. INDIA.
	            Phone : +91 44 2434 1674
                Whatsapp No : +91 73058 21638
	            Email : editor@ammandharsanam.com
You may send your payments favour of
	            Amman Dharsanam Publications Pvt Ltd.,
	            Payable at Chennai, India. Mode of payment may be
	            1) Money Order 2) Demand Draft (DD)
	            payable at  Chennai along with the following details.
	            Subscriber Name / Address / Period of Subscription
	            D.D.  No. and Date / Amount