நம் புண்ணியபாரதபூமியிலே தர்மரக்ஷணத்திற்காக ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதாச்சார்யர்கள் நான்கு ஆம்நாயபீடங்களை ஸ்தாபித்துள்ளார்.
அவற்றுள் தக்ஷிணதேசத்திலிருப்பதும் சிஷ்யர்களாலும் பக்தர்களாலும் மிகுந்த உவகையோடும் உள்ளன்போடும் கொண்டாடப்பெறுவதும் தக்ஷிணாம்நாயசிருங்கேரிஸ்ரீசாரதாபீடம் ஆகும். ஆத்மபோதமும் காருண்யமும் ஆழ்ந்தசாஸ்திரஞானமும் உடையோரான ஆசார்யர்கள் இங்கு பீடாதிபதிகளாக ஆரோஹணித்து அருளாட்சி நிகழ்த்திவந்துள்ளார்கள்.
சிருங்கேரி ஜகத்குருக்களின் பரிபூரண நல்லாசிகளுடன் தர்மப்பிரசாரத்தினைக் குறிக்கோளாகக்கொண்டு செப்டெம்பர் 1990ல் துவக்கப்பெற்றதே அம்மன்தரிசனம்.
அம்மன்தரிசனம் ஆன்மீகப்பத்திரிகைகளிடையே தன்னிகரற்ற மாதஇதழாகவிளங்கி, சிருங்கேரி சாரதாம்பிகையின் பேரருளையும் சிருங்கேரி ஜகத்குருக்களின் உபதேசங்களையும் நம்சாஸ்திரங்கள் மற்றும் புராணஇதிகாசங்களிலிருந்து தர்மத்தை எடுத்துச்சொல்லும் கதைகள் மற்றும் கட்டுரைகளையும், சிருங்கேரிபீடம்மற்றும் ஆலயங்களில் நடைபெறும் முக்கியநிகழ்வுகளையும் இல்லந்தோறும் எடுத்துச்செல்கிறது.
அன்பானவாசகர்களே! அம்பிகையும் ஆச்சார்யர்களும் ஆசிபொழிய, நம் ஆன்மீகப்பயணத்தை அம்மன்தரிசனத்துடன் தொடருவோம், வாருங்கள்!